ஊராட்சி தலைவர் பதவியேற்பு விழா மேடைக்கு தீ வைத்த மர்மநபர்கள்

மதுரை மாவட்டத்தில் ஊராட்சி தலைவராக பட்டியலினத்தவர் பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து, விழா மேடைக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஊராட்சி தலைவர் தேர்தலில், பட்டியலினத்தை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையை, திங்கட்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அதே பகுதியில் புதிய மேடை அமைத்து பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் நாகலட்சுமி, காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, மேடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தனக்கு பாதுகாப்பு கோரியும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வலியுறுத்தியும், மதுரை ஆட்சியரிடமும் நாகலட்சுமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே