12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்

தொழிலாளர் சட்டசீர்திருத்தங்கள், தனியார்மயமாக்கள் மற்றும் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.

பேருந்துகளும் பெரும் அளவில் இயக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹவுராவில் தொழிற்சங்கத்தினர், ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினர். புருத்வான் பகுதியில் போராட்டக்காரர்களால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் அதன் தொழிற்சங்கத்தினர் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றும் வரும் முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மும்பையில் பாரத பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரத பெட்ரோலியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே