தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர் என்னை கடத்த முயன்றார். மர்ம நபர்களால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், வி.வி.மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன் நெல்லை மாநகர காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகளவில் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான வி.வி. மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன்.

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளரும் கூட. இதுமட்டுமின்றி பல
துறைகளில் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமான வரித்துறையிடம் சிக்கினார்.

முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது பேசும் பொருளாகியுள்ளது. 

அத்துடன் இவர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரனுக்கு வைகுண்டராஜன் ரூ. 2.5 கோடி பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியது.

இதை கண்டித்த தினகரன், இது பொய்யான குற்றச்சாட்டு என்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே