தென் மண்டல ஐஜி ஆக முருகன் நியமனம்!

தென் மண்டல ஐ.ஜி.,யாக முருகனும், தூத்துக்குடி எஸ்பியாக ஜெயக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கடையை திறந்ததாக ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.

அவர்கள் இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தூத்துக்குடி எஸ்.பி.,யாக இருந்த அருண் பாலகோபாலன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதில், விழுப்புரம் எஸ்.பி.,யாக இருக்கும் ஜெயக்குமார், தூத்துக்குடி எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென் மண்டல ஐ.ஜி.,யாக இருக்கும் சண்முக ராஜேஷ்வரன், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 

இதனையடுத்து, அந்த பதவிக்கு, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே