#Exclusive : ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் – மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கை

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் தாக்கியதால நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்ததில் தெரியவந்தது என மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்த சென்றார். 

அவர் அங்கு நடந்தது குறித்து உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் பாரதிதாசன் கூறுகையில் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் லத்தியால் விடிய விடிய அடித்துள்ளனர்.

இது நேரடி சாட்சியின் வாக்குமூலம் மூலம் தெரியவந்தது.

காவல் நிலையத்தில் வத்தி மற்றும் மேஜையில் ரத்தக் கறை இருந்ததை அழிக்க வாய்ப்புள்ளதாகவும் சாட்சியம் அளித்தவர் கூறினார்.

சாட்சியம் அளித்த பெண் காவலரை மற்ற காவலர்கள் மிரட்டினர்.

லத்தியை கேட்ட போது காவலர் மகாராஜன் முன்னுக்கு பின் முரணான வகையில் பேசினார்.

மீண்டும் மீண்டும் லத்தியை கேட்ட போது அங்கிருந்த மற்றொரு காவலர் தப்பி ஓடினார்.

பின்னர் வற்புறுத்தி கேட்ட போது லத்தியை கொடுத்தார்கள். கூடுதல் எஸ்பியும் டிஎஸ்பியும் நிகழ்விடத்தில் இருந்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

காவலர் மகாராஜன் உன்னால் ஒன்றும் …. முடியாது என மிரட்டினார். காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தினமும் அழியும் படி செட்டிங் செய்யப்பட்டிருந்தது.

தனது வாக்குமூலத்தை பதிவு செய்த தலைமை காவலர் ரேவதி அச்சத்துடனேயே இருந்தார்.

அந்த வாக்குமூலத்தில் அவர் கையெழுத்திட தயங்கிய போது முழு பாதுகாப்பு கொடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர் கையெழுத்திட்டார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே