முரசொலி நில விவகாரம் – மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக நோட்டீஸ்!

பஞ்சமி நில விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி நேரில் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதலில் புகார் கூறினார்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் புகாரளித்தார்.

இதுதொடர்பான விசாரணை சென்னையில் நடைபெற்றது.

இதில் திமுக சார்பாக அதன் அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி ஆதராங்களை சமர்ப்பித்தார். பாஜக சார்பாக சீனிவாசன் ஆஜரானார்.

பின்னர் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகாரளித்த விவகாரத்தில் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர்களிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என்று திமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் ஜனவரி 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே