ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு..!!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இல் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மும்பையில் நாதன் கூல்டர் நைலுக்குப் பதில் ஜேம்ஸ் பேட்டின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்திலும் விளையாடவில்லை.

ராஜஸ்தானில் எவ்வித மாற்றமும் இல்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே