இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. அரையிறுதியில் தோல்வியடைந்த பி.வி.சிந்து

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில், இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. நடப்பு உலக சாம்பியனும், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை போன்பவி சோச்சுவாங்கை இன்று எதிர்கொண்டார். இப்போட்டியின் துவக்கம் முதலே தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் தடுமாறினார்.

இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சோச்சுவாங் புள்ளிகளை குவித்த வண்ணம் இருந்தார். முடிவில், 21-17, 21-9 என்ற நேர் செட்களில் சோச்சுவாங் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கடந்த 2018ல் நடந்த ஆல் இங்கிலாந்து போட்டியிலும் பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே