சின்னத்திரை நடிகை நிலானியை செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டிய புகாரில் அவரது நண்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீஸ் உடையில் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நிலானி.
இவர் சென்னையை அடுத்த போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நிலானி, தனது கணவரை விட்டு பிரிந்து தனியே வாழும் நிலையில், அவரது நெருங்கிய நண்பரான காட்பாடியை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நடிகை நிலானி குடுத்த புகாரின் பெயரில் போரூர் காவல்நிலைய போலீசார் மஞ்சுநாதனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.