குன்னூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆட்டோக்கள் அடித்துச் செல்லப்பட்டன.

குன்னூரில் அதிகாலை பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் நகர், வேளாங்கண்ணி சாலை, சி.டி.சி.சாலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

சி.டி.சி.சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகள் சிக்கிக் கொண்டன.

கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

வேளாங்கண்ணி சாலை பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதனால் மக்கள் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர் சேதம் குறித்த தகவல்கள் தெரியாத நிலையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே