புதிய கல்விக் கொள்கை குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்!

புதிய கல்வி கொள்கையில் நாட்டின் GDP-ல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும்.

மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே