விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றுவதே விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதன் குறிக்கோள் – பிரதமர் மோடி

நாட்டில் உள்ள விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்றுவதே இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜான்ஸியில் அமைந்துள்ள ராணி லஷ்மிபாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டடங்களை தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், விவசாயம் மற்றும் விவசாயிகள் தொழில்வடிவில் முன்னேறினால், கிராமங்களில் சம வேலை வாய்ப்பு ஏற்படும்.

விவசாயிகள் இயற்கை வேளாண்மையை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

விவசாயத்தில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே இலக்கு.

விவசாயிகளை தொழில்முனைவோராக்குவதே, விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதன் நோக்கமாகும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே