திமுக வேட்பாளர் பட்டியலை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கும் பணி நேற்று நிறைவு பெற்ற நிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

முன்னதாக, நேற்று மாலை வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது.

இறுதியாக இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

முன்னதாக், வேட்பாளர் பட்டியலை இன்று காலை கருணாநிதி இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப் படத்தின் முன் வைத்து கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு வேட்பாளர் பட்டியலை வைத்து, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களின் பட்டியல் இன்று ஒரே கட்டமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை (சனிக்கிழமை) வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே