ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஸ்டாலின்

ஜார்க்கண்ட் முதலமைச்சராக வரும் 29ம் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதள கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றி பெற்றது.

இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் அந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே