ஜார்க்கண்ட் தேர்தல் முடிவை வைத்து மத்திய அரசை எடை போட முடியாது : பொன்.ராதாகிருஷ்ணன்

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவை வைத்து மத்திய அரசை எடை போட முடியாது என பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஸ்வாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவை வைத்து மத்திய அரசை எடை போட முடியாது என்றும் அது ஒரு மாநிலத்திற்கான தேர்தல்தான் எனவும் கூறினார்.

பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மராட்டிய வெற்றிக்குப் பின்பு ஆசையின் காரணமாக விலகி போனதால் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும்; அதற்கான விலையை சிவசேனா கொடுத்தாக வேண்டும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே