முதல்வருக்கு எம்.ஜி.ஆர் பாடல் மூலம் பதிலடி கொடுத்த கமல்..!!

‘எதிர் காலம் வரும் என் கடமை வரும்’ என்று ட்விட்டரில் மநீம தலைவர் கமல் எம்,ஜி.ஆர் பாடலை பதிவிட்டுள்ளார்.

அரியலூரில் வியாழனன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, லஞ்ச ஒழிப்புத்துறை குறித்த கமல்ஹாசனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில்,’70 வயதாகிறது.

70 வயதில் பிக்-பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்.

பிக்-பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இதை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது.

நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை.

அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டு விடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டு விடும்.’ எனத் தெரிவித்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசன் வியாழன் மாலை தனது ட்விட்டர் பதிவில், ‘முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கின்றது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ‘எதிர் காலம் வரும் என் கடமை வரும்’ என்று ட்விட்டரில் மநீம தலைவர் கமல் எம்,ஜி.ஆர் பாடலை பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சற்றுமுன்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்

`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்..

ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’

என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே