நடிகர் ரஜினிகாந்த் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டார் : ஹெச். ராஜா

நடிகர் ரஜினிகாந்த் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 43வது புத்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மேற்கோள் காட்டியது, ஒரு சின்ன பகுதி மட்டுமே எனவும், இதில் தவறாக எதுவும் அவர் பேசவில்லை எனவும் கூறினார்.

இதற்காக வருத்தம் தெரிவிக்கும்படி ஒரு சிலர் விடுக்கும் மிரட்டலுக்கு ரஜினி அஞ்சமாட்டார் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, முரசொலி வைத்திருப்பவர்கள் திமுக காரர்கள், துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே