12 மணி நேரத்தில் 7 வழிப்பறி கொள்ளை – சிசிடிவி-ன் உதவியுடன் கொள்ளையன் கைது..!

சென்னையில் ஒரே இரவில் அடுத்தடுத்து கத்தியை காட்டி மிரட்டி ஏழு வழிப்பறிகளில் ஈடுபட்ட பலே கொள்ளையனை 12 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி பெட்ரோல் பங்கிற்கு வந்த மர்ம நபர், ஊழியர்களை கத்தியால் தாக்கி, மிரட்டி தனது வாகனத்திற்கு இலவசமாக 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பிவிட்டு, செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினான்.

தொடர்ந்து பெண் உட்பட 6 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி, தாக்கிவிட்டு செல்போன்களை பறித்துச் சென்றுள்ளான்.

இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகன பதிவு எண்ணைக் கொண்டு அவனை தேடி வந்தனர்.

அப்போது, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் கொள்ளையன் பயன்படுத்திய பைக் நின்றதை கண்டு, அந்த வீட்டிற்குள் நுழைந்த போலீசார், தப்பியோட முயன்றவனை சுற்றி வளைத்தனர்.

ஏற்கனவே 3 கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகளில் தொடர்புடைய இவன், கோவையில் தலைமறைவாகியிருந்து, 2 மாதத்திற்கு முன் மீண்டும் சென்னைக்கு வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே