பொடி பையனோடு திருமணத்துக்கு தயாரான இளம்பெண்.. கடைசிநேரத்தில் நடந்த திருப்புமுனை..!

வேலூர் மாவட்டம் அரியூரைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, கருத்துவேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார். அந்த பெண் வசதியான வீட்டை சேர்ந்தவர். அவரது குடும்பமும் கோடீஸ்வரக் குடும்பம்.

. இதனால் பெண்ணின் தந்தை என் மகளுக்கு உன்னைவிட நல்ல இடத்தில் சம்பந்தம் பார்த்து திருமணம் செய்துவைப்பேன் என சவால்விட்டுச் சொல்லியிருக்கிறார். கூடவே தன் நண்பர்களிடம் தன் மகளை இரண்டாம்தாரமாக திருமணம் செய்பவருக்கு கார், பலலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றை வழங்குவதாகச் சொல்லியிருக்கிறார்.

அவரது நண்பர்களில் ஒருவர் சொத்துக்கு ஆசைப்பட்டு தன் மகனை திருமணம் செய்துவைக்க சம்மதித்தார். இத்தனைக்கும் அந்த பையனுக்கு 18 வயதுதான் ஆகிறது. ஏற்கனவே நிச்சயம் முடிந்துவிட்ட நிலையில் இவர்களது திருமணம் வரும் 12ம் தேதி நடப்பதாக இருந்தது.

இந்நிலையில் மணமகனின் தாயார் இதுகுறித்து போலீஸில் புகார் சொன்னார். இதனைத் தொடர்ந்து இருவரது வீட்டுக்கும் நேரில் சென்ற போலீஸார் இந்த திருமணத்தை நிறுத்தும்படியும், அதையும் மீறி திருமணம் செய்தால் அதற்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்தனர்.

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே