ரூ.1000 வேண்டாமா? விட்டுக்கொடுக்க விருப்பம் தெரிவிக்கலாம்

கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விலையில்லா பொருட்கள் ஆகியவை வேண்டாம் என்போர் தங்கள் விருப்பத்தினை தெரிவிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக அரசு தமிழகத்தில் உள்ள ஓவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 1000 ரூபாய் உதவி தொகை மற்றும் விலையில்லா அத்தியாவசிய பொருட்களையும் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த திட்டம் மூலம் உதவி தொகையையும், விலையில்லா பொருட்களையும் வாங்க விருப்பமில்லாதவர்கள் தமிழக அரசிடம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

இதனை tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலோ, அல்லது tnepds என்கிற செயலியிலோ தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. 

இந்த முறை ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே