Reserve Bank Of Kailaasa : சாமியார் நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு!

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை பிடிக்க கர்நாடக மாநில போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர் “கைலாசா” என்ற தீவை விலைக்கு வாங்கி அங்கு குடியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு நாட்டிற்கு தேவையான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

காவல்துறைக்குத் தண்ணீர் காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும் வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, ‘வாடிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலாசா  பணம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவேன்.

300 பக்க பொருளாதார கொள்கை தயாராக உள்ளது. பணம் அச்சடித்து வெளியிடுதல்,ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமாகவே கையாளப்படும்,’ என்று தெரிவித்தார். 

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே