சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் என்ற மாபெரும் கட்சியின் முக்கிய தூணாக இருந்தவர் ஜெயலலிதா.

அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதல்வரும் அவரே.

ஜெயலலிதாவிற்காக கலைநயத்துடன் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், 57.8 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமாக நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை கடந்த வாரம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் மைய பணிகள் நிறைவடையவில்லை என தெரிவித்துள்ள அரசு, இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால், ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாகவும் சிரமத்துக்கு மன்னிக்கவும் என்றும் பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே