தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் நியமனம்!

தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. மேலும் தலைவர் பதவிக்கு பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்டது.

ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கேடி ராகவன் இவர்களில் ஒருவர் தான் இந்த பதவிக்கு வருவார்கள் என கூறப்பட்டது. 

இந்நிலையில் பாஜக தமிழக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே