ஜகமே தந்திரம் பற்றி நடிகர் தனுஷ் போட்ட ட்வீட்..!!

ஜகமே தந்திரம் குறித்த தனது எதிர் பார்ப்பை தெரியப்படுத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’.

இதில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்திருக்கும் இந்தப் படம், 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது.

ஆனால் கொரோனா பெருந்தொற்று அதனை தள்ளிப் போகச் செய்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்தப் படம் ஓடிடி-யில் வெளியாகுமா இல்லை திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே ஒரே நேரத்தில் திரையரங்கிலும், ஓடிடி-யிலும் வெளியாகும் என்ற தகவல்களும் வெளியாகின. 

இதற்கிடையே ஜகமே தந்திரம் படம் குறித்த தனது விருப்பத்தை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில், ‘தியேட்டர் உரிமையாளர்கள், கண்காட்சியாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள் மற்றும் எனது ரசிகர்கள் என அனைவரையும் போலவே ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின், திரையரங்கு வெளியீட்டை எதிர்பார்க்கிறேன். ஃபிங்கர்ஸ் க்ராஸ்டு’ எனப் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே