தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 710 மதிப்பெண்களுடன் ஈரோடு பள்ளி மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்தார்.

நாமக்கல்லை சேர்ந்த மோகனப்பிரபா 705 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடம் பிடித்தார்.

சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்வேதா 701 மார்க்குடன் 3ஆம் இடம் பிடித்தார் என விஜயபாஸ்கர் கூறினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டில் தேனி சில்வார்பட்டி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேர் பயன் பெற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 18ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது.

3 ஆயிரத்து 650 மருத்துவ இடங்களுக்கு 34 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே