திண்டுக்கல் பழனியில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலத்த காயம்..!!

பழனியில் இடத்தகராறு காரணமாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயம் அடைந்தனர். நடராஜன் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நரிக்கல்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு அப்பர்தெருவில் 12 செண்ட் இடமுள்ளது. இவர் அங்கு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் பழனியில் தியேட்டர் நடத்தி வரும் நடராஜன் என்பவர் இது தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இளங்கோவின் உறவினர்கள் பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரும், நடராஜனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் பழனிசாமியின் வயிற்றிலும், சுப்பிரமணியின் தொடையிலும் குண்டுப்பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பழனிசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், நடராஜனை கைது செய்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே