மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் மார்ச் 22-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்திருக்கு புரமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, இன்று இசை வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளது.
திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த விழாவில் மார்ச் 22-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.