என்ன சிம்ரன் இதெல்லாம்..?? மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் நடனம்..

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்ரன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தாய், தந்தை உட்பட படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

மாஸ்டர் பட விழாவில் கலந்து கொண்ட நடிகை சிம்ரன், விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார்.

நடிகை சிம்ரனின் நடனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இது நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒரு காலத்தில் கதாநாயகனுக்கு இணையாக சிம்ரன் இருந்து விட்டு இப்போது இந்த விழாவில் நடனம் ஆடியது 90’ஸ் கிட்ஸ்க்கு சற்று வேதனையை அளித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே