சென்னை உயர்நீதிமன்றத்தில், கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு, சென்னை ஐஐடி வளாகத்தில் சுற்றி திரிய கூடிய கால்நடைகளை முறையாக கவனிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதி கேசவலு தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், ஐஐடி வளாகத்தில் கடந்த 6 மாதங்களில் 49 நாய்கள் இறந்துள்ளன. நாய்கள் இறப்புக்குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை விட்டு செல்வதாகவும், நாய்களை முறையாக பராமரித்து வருவதாகவும் ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துக்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஐஐடி வளாகம் உயிரியல் பூங்கா அல்ல என்றும், நாய்களை பராமரிப்பது ஐஐடி-யின் பணியில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நாய்களை பராமரிப்பு பகுதியாக ஐஐடி மாறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.