தொடர் மழையால் மழைநீர் சூழ்ந்து காணப்படும் கருணாநிதி இல்லம்..!!

சென்னையில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குள் மழைநீர் புகுந்தது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குள் மழைநீர் புகுந்தது.

சென்னை கோபாலபுரத்தில் மறைந்த முதல்வரும் திமுக தலைவராக நீண்ட ஆண்டுகள் பணியாற்றியவருமான கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ளது.

செவ்வாய் காலை முதல் பெய்துவரும் மழையின் காரணமாக அவரது இல்லத்தை மழைநீர் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது மழைநீர் சிறிய அளவில் வீட்டினுள் புகுந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே