மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை அவையை ஒத்திவைத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
நேற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை இன்று (பிப்.5) பிற்பகல் கூடியது.
மக்களவை கூடிய சிறிது நேரத்தில், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்களவையை மாலை 6 மணி வரை ஒத்திவைத்து பேரவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.