ஜல்லிக்கட்டு போராட்டங்களில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும், அதில், காவலர்களை தாக்கியது, வாகனங்களை சூறையாடியது உள்ளிட்டவை தவிர பிற வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2017ம்- ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், தலைநகர் சென்னை முதல் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்து. தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தைகாக்க சமூக வலைதளங்கள் மூலம் இணைந்த இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போராட்டத்திற்கு ஆதரவாக திரையுலகினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை மெரினா கடற்கரை ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

அப்போது, காவலர்கள் எச்சரித்த கெடுவையும் மீறி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்ட‌த்தில் ஈடுபட்டனர்.

அரசு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும்வரை போர‌ட்டம் தொடரும் என்று போர‌ட்டக்காரர்கள் அறிவித்தனர்.

போராட்டக்காரர்கள் இடத்தை விட்டு கலைய மறுத்தும் அதே இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இதனால், போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டங்களில் காவலர்களை தாக்கியது, வாகனங்களை சூறையாடியது உள்ளிட்டவை தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாணவர்கள், இளைஞர்கள், முக்கிய பிரபலங்கள், திரையுலகினர் என பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்க உள்ளார்களாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே