சிங்கப்பூரில் ஜூன் 1 வரை லாக் டவுன் நீட்டிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் பிரதமர் லீ சிங் லாங் (Lee Hsien Loong), இன்று தளர்த்தப்பட்ட லாக் டவுனை (Partial Lockdown) வரும் ஜூன் 01, 2020 வரை நீட்டித்து இருக்கிறார்.

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரும் ஒன்று. யாரைத் தான் விட்டு வைத்தது கொரோனா?

சிங்கப்பூரில் மட்டும் சுமார் 9,125 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பரவி இருப்பதாக, அந்நாட்டு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகமே சொல்கிறது.

2 வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட லாக் டவுன் நடவடிக்கைகள் எல்லாம், வரும் மே 04, 2020 உடன் முடிவுக்கு வர வேண்டும்.

ஆனால் இப்போது, கொரோனா வைரஸ் மேற்கொண்டு அதிகம் பரவக் கூடாது என்கிற நோக்கில், வரும் ஜூன் 01, 2020 வரை நீட்டித்து இருக்கிறது சிங்கப்பூர் அரசு.

இந்த நடவடிக்கைகளை சிங்கப்பூரின் பிதமர் லீ சின் லாங், சர்க்யூட் பிரேக்கர் என்று அழைக்கிறார்.

இந்த நடவடிக்கையில் பள்ளிகளை மூடுவது, பெரும்பாலான அலுவலக பணி இடங்களை தற்காலிகமாக மூடுவது போன்றவைகளும் அடக்கமாம்.

அப்படி என்றால் உலகத்தின் வர்த்தக நகரமாக இருக்கும் சிங்கப்பூரே ஜூன் மாதம் வரை முடங்கித் தான் இருக்கும்.

இந்த partial lockdown காலத்தில் சிங்கப்பூரில் இருக்கும் பிசினஸ்கள், தங்களை சமாளித்துக் கொள்ள, சில உதவித் திட்டங்களை, மே மாதம் வரை நீட்டிக்க இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது சிங்கப்பூர் அரசு.

இதில் கூலி மானியம் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி கட்டணங்களில் தள்ளுபடி (Rebates in foreign worker levies) போன்றாவைகளும் அடக்கமாம்.

சிங்கப்பூரில் புதிதாக கொரோனா தொற்று வரும், பெரும்பாலான நோயாளிகள், டார்மிட்டரிகளில் வாழும் புலம் பெயர்ந்து வந்து வேலை பார்ப்பவர்களுக்கு தான் அதிகமாக இருப்பதாகவும் சிங்கப்பூர் அரசு சொல்லி இருக்கிறது.

சிங்கப்பூர் நாட்டில் கட்டுமான வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களைத் தான் அதிகம் நம்பி இருக்கிறது.

சிங்கப்பூர் நாட்டில், தொடர்ந்து 1,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிப்பது இன்று இரண்டாவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் கிழக்கு ஆசியாவிலேயே அதிகமாக கொரோனா இருக்கும் நாடுகளில் தற்போது சிங்கப்பூர் முன்னிலை வகிக்கத் தொடங்கி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே