பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி – கங்கனா ரனாவத் !

பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் இதுவரை ஒரே ஒரு தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2008-ல் வெளியான தாம்தூம் படத்தில் அவர் நடித்திருந்தார். அடுத்ததாக தலைவி படத்தில் நடித்து வருகிறார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார்.

இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். 

விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இசை – ஜி.வி. பிரகாஷ். ஜூன் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்தார்கள். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார்.

இந்நிலையில், பெப்சி தொழிலாளர்களுக்கும் தலைவி படத்தின் தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் நடிகை கங்கனா ரனாவத் ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே