உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை ஒலிக்கும் – மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்..!!

உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை நாளை காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார் ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை நாளை காஞ்சிபுரத்தில் தொடங்குவதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே