கொரோனா தொற்றால் தமிழகத்தின் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டது.
இதனிடையே ஓமிக்கிரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுதும் ஓமிக்கிரான் தொற்று அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உத்தரவு படிப்படியாக போடப்பட்டு வருகின்றன.
இதையடுத்து 2022ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு தற்போது புத்தாண்டை ஒட்டி பல்வேறு விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. புதுச்சேரியில் கடற்கரை ஓட்டல்களில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது புதுச்சேரி ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்வதற்கு கலால் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. பிற மதுக்கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது.