தமிழக சட்டசபையின் 3 ஆம் நாள் கூட்டத்தொடர் மாலை நிறைவடைந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவைக் கூட்டம், 3 நாள்களுக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், முகக்கவசம் அணிந்து கூட்டத் தொடரில் பங்கேற்றனர்.

இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையின் 3 ஆம் நாள் கூட்டத்தொடர் இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், மறு தேதி அறிவிக்கப்படாமல் பேரவை கூட்டத்தை சபாநாயகர் தனபால் நிறைவு செய்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2759 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே