பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்..!!

தெலுங்கு சினிமாவில் ரெபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜு உடல்நலக்குறைவால் காலமானார்.

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

பிரபல நடிகரான கிருஷ்ணம் ராஜு தெலுங்கு சினிமாவில் 183 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவரை ரசிகர்கள் ரெபெல் ஸ்டார் என்று அழைப்பார்கள். நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர். 5 ஃபில்ம் பேர் விருது, 3 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே