வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த அம்மோனியம் நைட்ரேட் வெடி விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 6000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

15 பில்லியன் மதிப்பில் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த ரசாயன கிடங்கில் முறையான பாதுகாப்பு இல்லாமல் சேமிக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் கடந்த வாரம் வெடித்து சிதறியது.

உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வெடி விபத்தால் சில நொடிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதாரம் அடைந்தன.

அரசின் அலட்சியத்தால் தான் இத்தகைய வெடி விபத்து ஏற்பட்டது என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். 

இந்நிலையில் விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டின் பிரதமர் ஹசன் டியாப் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த விபத்தால் லெபனான் தலைநகரம் பெய்ரூட் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கிய நிலையை சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தால் கோபத்திற்கு ஆளாகிய லெபனான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.

அதன் விளைவாக பிரதமர் ராஜினாமா கடிதத்தை பாப்டாவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சென்று கொடுத்தார்.

பிரதமரின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக அந்நாட்டின் குடியரசு தலைவர் மிச்செல் ஔன் கூறியுள்ளார்.

மக்களோடு நின்று, ஏற்பட்ட பெரும் விபத்தில் பலியானவர்களின் நீதிக்காக போராட இருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

நேற்று காலையில் நீதித்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே