இ-பாஸ் வசதி இன்றுடன் திரும்பப் பெறப்படுகிறது; சென்னை விமான நிலையம் அறிவிப்பு!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் தமிழ்நாடு இபாஸ் (TN e-Pass) பெறும் வசதி இன்று மாலை 6 மணி முதல் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஒன்றாக மாநிலங்களுக்கு இடையே விமானத்தில் பயணிப்போருக்கு இபாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் சென்னை விமான நிலையம் வெளியிட்ட பதிவில், இன்று மாலை 6 மணி முதல் அந்த வசதி திரும்பப் பெறப்படுவதாகவும்; இனிமேல் இபாஸை பயணத்துக்கு முன்பு https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையத்தில் விண்ணப்பித்து பெறும்படி பயணிகளை கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே