தமிழ்நாட்டில் நம்மை காக்கும் 48 – ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை அவர் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதே ‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ ஆகும். தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செய்லபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிகச்சிறந்த சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே