Lakshmy Ramakrishnan- ஐ கிழித்து தொங்க விட்ட வனிதா…. (Video)

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார்.

மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.

இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் புகாரளிக்க, இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. 

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமாரும், இயக்குநரும் நடிகையுமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனும் BEHINDWOODS -ல் வீடியோ கால் மூலம் உரையாடினார்கள்.

அப்போது வனிதா விஜயகுமார், ”இந்த பிரச்சனையில் உள்ளே வர நீங்கள் யார்.?, ஹெலன் சொல்வதை கேட்டு, நீங்கள் எப்படி அவருக்கு நம்பிக்கை கொடுக்கலாம்.? என கேள்வி எழுப்பினார்.

மேலும் வனிதா விஜயகுமார் கோபத்தில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை ஒருமையில் பேசியதாலும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாலும், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பேட்டியை முடித்து கொண்டு சென்றார். 

இதுகுறித்து இருவரும் பேசிய முழு வீடியோவை இங்கே காணலாம்..,

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே