ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, நடிகர் பகத்பாசில் நடிக்கும் புதியப்படத்தை பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்க இருக்கிறார்.

‘நிவின் பவுலி’, ‘நஸ்ரியா’ நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நேரம்’. இந்தத்திரைப்படத்தை மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கினார். 

இவரது இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமா மட்டுமல்லாது அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தத்திரைப்படத்தில் நிவின் பவுலி, மடோனா செபஸ்டின், சாய்ப்பல்லவி, அனுபமா பரமேசுவரன் உள்ளிட்டோர் நடித்தனர்.

குறிப்பாக இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற நிவின் பவுலி, சாய்ப் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், அல்போன்ஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அல்போன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் கூறும் போது, ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எங்களது ‘பாட்டு’ படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்தப்படம் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே