சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கூடுதலாக பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதனைத் தொடர்ந்து கூடுதலாக பக்தர்களை அனுமதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுக்களை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கூடுதலாக பக்தர்களை அனுமதிக்கலாம் என்று கூறியது. இதனையடுத்து இன்று முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே