தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பின்னடைவை பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக முன்னிலையில் இருந்தன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 3 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 147 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளிலும் முன்னலை வகித்து வருகிறது.

இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில்யில் இருந்து வந்தார். 14 வது சுற்று முடிவில் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே