குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மாரடைப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில்தான் குடியாத்தம் தொகுதியில் இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவரது மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் உயிரிழந்ததால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைந்துள்ளது.
திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி இறந்த மறுநாளிலேயே காத்தவராயனும் காலமாகி உள்ளார்.