நவராத்திரி கோவிலில் கொலு கண்காட்சி

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள நவராத்திரி திருக்கோவிலில் 5 ஆம் ஆண்டு நவராத்திரி விழா மற்றும் கொலு பொம்மைகள் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

5 ஆயிரம் கொலு பொம்மைகளை கொண்டு நடைபெறும் இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சமாக திருவிளையாடல் நிகழ்வு, முருகன் உலகை சுற்றி வருவது போலவும் கொலு வைக்கப்பட்டுள்ளது.

32 வகையான வெண்கல பிள்ளையார்கள், தாய்லாந்து பொம்மைகள், துபாய் பொம்மைகள், மரத்தாலான பொம்மைகளும், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட பொம்மைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே