கிசான் திட்ட முறைகேடு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவாசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் விதமாக மத்திய அரசு விவசாய நிதியுதவி (பி.எம். கிசான்) திட்டம் தொடங்கியது.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பல விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும்; முறைகேடு நடந்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக வேளாண்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

அதே போல, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் ககன்தீப் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன் படி, இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், முறைகேட்டில் ஈடுபட்டதாக அம்மாவட்டத்தில் 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிமேகலை, வீரன், ஏழுமலை மற்றும் கண்ணப்பன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே