மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 6,522 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,075 கன அடியிலிருந்து 6,522கன அடியாக அதிகரித்துள்ளது.

எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.01 அடியாக உள்ளது.

மேலும் அணையின் நீர் இருப்பு 51.52 டிஎம்சியாகவும் உள்ளது.

மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் இருந்து விநாடிக்கு 16,000 கன அடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 800 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது .

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே