டெல்லியில் மத்திய அரசு, விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை..!!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 26-ம் தேதி முதல் புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் போராடுவதால் தலைநகரே முடங்கிப் போய் உள்ளது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. 

இதனால், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற வெளிமாநில தொடர்பை தலைநகர் டெல்லி இழந்துள்ளது.

இதனால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனே கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ம் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

மேலும், 3 கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், இதில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடியின் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே